×

பெரிய முதலைகள் கடனை கட்டாமல் தப்பியதால் வராக்கடனில் சிக்கி தவிக்கும் 11 வங்கிகள்

புதுடெல்லி: வராக்கடன் விவகாரத்தால் அரசுக்கு சொந்தமான 11 வங்கிகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பது குறித்து ரிசரவ்் வங்கி அடுத்த மாதம் 14 ம் தேதி கூடி முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. அரசுக்கு சொந்தமான வங்கிகளில் இருந்து தான் பல பெரிய  தொழிலதிபர்களும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பல கோடிகளில் கடன் பாக்கி வைத்து விட்டு தப்பி விடுகின்றனர். இப்படி பல ஆண்டாக நடந்து ெகாண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இவர்கள் தவிர, அடுத்த கட்டங்களில் உள்ள தொழிலதிபர்கள் நூற்றுக்கணக்கான பேர் கடன் பாக்கி வைத்து விட்டு கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இவர்களை வங்கிகளும் கண்டுகொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் அரசியல் தலையீடுகள் தான் காரணம்; கடன் பெறவும், கடன் பாக்கியை கட்டாமல் டிமிக்கி கொடுப்பதற்கும் இந்த அரசியல் செல்வாக்கு தான் காரணம் என்று வங்கி ஊழியர்கள் அமைப்பு தரப்பில் பலரும் குமுறுகின்றனர். இப்போதுள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல்,  சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து நலிந்த வங்கிகளை மீண்டும் புத்துயிர் பெற வைக்க முயற்சி செய்து வருகிறார். சமீபத்தில் எடுத்த கணக்குபடி, 11 அரசு வங்கிகள் நலிந்த நிலையில் உள்ளன. இந்த வங்கிகளால், எந்த வகையிலும் பொதுமக்களுக்கு கடன் தர முடியவில்ைல. டெபாசிட்களையும் திரட்ட  முடியவில்லை. காரணம், வராக்கடன் பிரச்னை தான்.

  வங்கி தரப்பில் உள்ள ரொக்க கையிருப்பு வெகுவாக குறைந்து, அதன் நிதி நிலை பெரிதும் சிக்கலுக்கு உள்ளானது. இப்படி 11 வங்கிகளும் தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டன. பொதுமக்களுக்கு எந்த வகையிலும் கடன் உதவி செய்ய முடிவில்லை. பொதுமக்களும் இந்த வங்கிகளில் டிபாசிட் செய்ய அச்சப்படுகின்றனர். கடந்த திங்கட்கிழமை அன்று நடந்த ரிசர்வ் வங்கி  இயக்குனர்கள் போர்டு கூட்டத்தில் இதுதொடர்பாக பேசப்பட்டது. வரும் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அரசு வங்கிகள்  எதுவும் நலிந்துள்ளன என்ற நிலை இருக்க கூடாது  என்று முடிவு செய்யப்பட்டது. அதே சமயம், வங்கிகளுக்கு எந்த வகையில் ரிசர்வ் வங்கி உதவ  முடியும் என்று அடுத்த கூட்டத்தில், அதாவது, டிசம்பர் 14 ம் தேதி கூட்டத்தில் முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறு, சிறு தொழில்களுக்கு தாராள கடன் உதவி
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்ற காரணங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தான். இந்த நிறுவனங்கள் எந்த வகையிலும் இதுவரை பலன் பெறவில்லை. மத்தியில் உள்ள பாஜ அரசுக்கு இது பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இவர்களின் ஒத்துழப்பு இருந்தால் தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற முடிவுக்கு வந்நதுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு தாராள கடனுதவி அளிக்க வேண்டும்  என்று ரிசர்வ் வங்கிக்கு யோசனை கூறியது. இதன்படி, வங்கிகள் மூலம் இந்த நிறுவனங்களுக்கு போதுமான கடன் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது குறித்தும், அடுத்த கூட்டத்தில் உரிய முடிவு எடுக்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : banks , bank, reserve bank, loan
× RELATED இந்தியாவின் 17 வங்கிகளில் மோசடி செய்து...